1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 6 ஆகஸ்ட் 2017 (11:08 IST)

காயத்ரி, சக்தியே காரணம் - ஓவியா இல்லாத பிக்பாஸை பார்க்க மாட்டோம் - ரசிகர்கள் கொந்தளிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியே சொன்றுவிட்டதால் இனிமேல் அந்த நிகழ்ச்சியை பார்க்க மாட்டோம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அப்பாவித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு, குழந்தை போல் பேசிக்கொண்டு, எப்போதும் சிரித்துக்கொண்டு, வெளிப்படையாக பேசிக்கொண்டு, எந்த கட்டுப்பாடுகளுக்குள்ளும் சிக்காமல், தனக்கு பிடித்ததை மட்டும் பேசியும், செய்து கொண்டும் வந்த ஓவியா பலரையும் கவர்ந்தார். கூகுளில் அவருக்கு மட்டுமே 95 சதவீத ஓட்டுகள் விழுந்தது. 
 
அதேபோல், அவரை கோபமூட்டி அழவைத்த காயத்ரி, ஜூலி, சக்தி ஆகியோருக்கு எதிராக ஓவியா ரசிகர்கள் சமூகவலைத்தளங்களான ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பொங்கி எழுந்தனர். அவர்களுக்கு எதிரான கருத்துகளையும், மீம்ஸ்களையும் அள்ளித் தெழுந்து வந்தனர். ஓவியாஆர்மி என்ற ஹேஸ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது.
 
தன்னுடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளாததால் மனமுடைந்து, குழம்பிப் போன ஓவியா, மன உளைச்சல் காரணமாக, நீச்சல் குளத்தில் விழுந்து தற்கொலை செய்யும் முடிவிற்கு சென்றார். அதன் பின் அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றினர். அதன் பின் அவருக்கு உளவியல் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினர். ஆனாலும், அங்கிருந்து வெளியேறுவதில் உறுதியாக இருந்த ஓவியாவை நேற்றி வெளியே அனுப்பிவிட்டனர். 


 

 
ஆனால், ஓவியா மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார், கமல்ஹாசன் அவருக்கு ஆலோசனை வழங்கி மீண்டும் உள்ளே அனுப்பிவிடுவார் என எதிர்ப்பார்த்திருந்த ஓவியா ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஓவியாவிற்காகவே அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வந்ததாகவும், இனிமேல் பார்க்கப்போவதில்லை எனவும் பலர் கூறி வருகின்றனர்.
 
மேலும், காயத்ரி, சக்தி ஆகியோர் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஓவியாவிற்கு எதிராக சதி செய்து, அவரை ஒதுக்கி, அவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதே அவர் வெளியே சென்றதற்கு காரணம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.