ஐபிஎல் போட்டிகள் சந்தேகம்… தோனியின் நிலை என்ன ? புலம்பும் ரசிகர்கள் !

Last Modified புதன், 18 மார்ச் 2020 (09:08 IST)

ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு நடப்பது சந்தேகம்தான் என்ற சூழல் உருவாகியுள்ளதால் தோனியின் ரசிகர்கள் ஏமாற்றத்துக்குள்ளாகியுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 8000 பேர் இறந்துள்ளனர். மேலும் சுமார் 2 லட்சம் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்தியாவில் வைரஸ் பாதிப்பால் 137 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக் காரணமாக இம்மாதம் 29 ஆம் தேதி நடக்க இருந்த ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15 ஆம் தேதி நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பின்னர் நடத்தப்படுமா என்பது உறுதியாக அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் உலகக்கோப்பைக்குப் பின்
சர்வதேசக் கிரிக்கெட்டில் விளையாடாமல் இருக்கும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மீண்டும் அணியில் இடம் பிடிக்க வேண்டுமென்றால் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவது மட்டுமே ஒரே வாய்ப்பு என சொல்லப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாமல் போகும் பட்சத்தில் தோனியின் சர்வதேசக் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என சொல்லப்படுகிறது. இது அவரது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இதில் மேலும் படிக்கவும் :