வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 18 மார்ச் 2020 (08:39 IST)

பக்தர்கள் கடும் எதிர்ப்பால் தஞ்சை பெரிய கோவில் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அவற்றில் ஒன்றாக அனைத்து வழிபாட்டு தலங்களையும் மூட உத்தரவிட்டது. இதனை அடுத்து கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் ஆகியவற்றில் வழிபாட்டு சம்பந்தமான நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தஞ்சை பெரிய கோவிலை மூட நிர்வாகம் முடிவு செய்தது. இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. தஞ்சை கோவில் நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
தஞ்சை பெரிய கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் என்றும் பெரிய கோவிலை பூட்டியது தவறு என்றும் பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து பக்தர்கள் கடும் எதிர்ப்பு காரணமாக கோவில் நிர்வாகம் தற்போது தஞ்சை பெரிய கோவிலில் பக்தர்களை அனுமதித்து வருகிறது. இருப்பினும் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது