தோனிக்கு வயது ஒரு தடையா? வேகத்த பாருங்க..

Last Updated: வியாழன், 26 ஏப்ரல் 2018 (14:45 IST)
கிரிக்கெட் வீரர் தோனி தனக்கு வயது ஒரு தடையல்ல என நிரூபிக்கும் வகையில், நேற்றைய ஐபிஎல் போட்டியில் பேட்டிங், விக்கெட் கீப்பிங், பீல்டிங் என்று ஆல்ரவுண்டராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.  
 
நேற்று சென்னை மற்று பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில், சென்னை அணி வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை த்ரில்லாக நடைபெற்ற போட்டியில், சிக்ஸ் அடித்து வெற்றியை உறுதி செய்தார் தோனி. 
 
போட்டியின் போது, ஆர்சிபி இன்னிங்ஸின் 3வது ஓவரில் டி காக் ஆடிய புல் ஷாட் ஒன்று தோனியின் தலைக்கு மேல் பறந்து கொஞ்ச தூரம் சென்றது. இந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. 
 
உடனே, தன் கால்காப்புகளுடன் விறுவிறுவென்று பந்தின் பின்னால் ஓடிய தோனி பந்து பவுண்டரி செல்லாமல் தடுத்து கையுறையை கழட்டிவிட்டு த்ரோ செய்தது ரசிகர்களுக்கு பூரிப்பை ஏற்படுத்தியது. 
 
மேலும் ஒருமுறை பந்து ஸ்கொயர் திசையில் செல்ல அங்கு பீல்டர்கள் யாரும் இல்லை என்பதால், விக்கெட் கீப்பிங்கிலிருந்து தோனியே 40-50 அடி தூரம் ஓடிச்சென்று பந்தை பீல்ட் செய்து த்ரோ செய்தார். நேற்றைய போட்டியில் பழைய உத்வேக தோனி கண்டோம் என ரசிகர்கள் தெரிவித்து வருக்கின்றனர்.


இதில் மேலும் படிக்கவும் :