1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Devdutt padikal third uncapped Indian player to score century

நேற்றைய போட்டியில் தேவ்தத் படிக்கல் நிகழ்த்திய சாதனை!

தேவ்தத் படிக்கல்
பெங்களூர் அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் நேற்றைய போட்டியில் சதமடித்து அசத்தினார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விக்கெட் இழப்பின்றி 178 ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அந்த அணியின் 20 வயது தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் 51 பந்துகளில் சதமடித்து அசத்தினார். அதில் 11 பவுண்டரிகளும் 6 சிக்ஸர்களும் அடக்கம்.

இதன் மூலம் இந்திய அணிக்காக விளையாடுவதற்கு முன்பே சதமடித்த மூன்றாவது இந்திய வீரராக சாதனைப் படைத்துள்ளார் படிக்கல். இதற்கு முன்னர் மனிஷ பாண்டே 2009 ஆம் ஆண்டிலும் பால் வால்தாட்டி 2011 ஆம் ஆண்டிலும் இதுபோல சதமடித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
ஐ.பி.எல் தொடரில் 6000 ரன்களை கடந்து சாதனை படைத்த வீரர்: குவியும் வாழ்த்துக்கள்