செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (07:52 IST)

ஐ.பி.எல் தொடரில் 6000 ரன்களை கடந்து சாதனை படைத்த வீரர்: குவியும் வாழ்த்துக்கள்

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபாரமாக வெற்றி பெற்றது என்பதும் படிக்கல் சதமடித்தார் என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் விராட் கோலி அதிரடியாக விளையாடி 72 ரன்கள் குவித்தார். அதுமட்டுமின்றி அவர் ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 
 
ஐபிஎல் தொடரில் இதுவரை 6 ஆயிரம் ரன்களை எடுத்தவர்கள் யாரும் இல்லை என்பதால் விராத் கோலியின் இந்த சாதனையை மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது. ஐபிஎல் வரலாற்றில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமை பெற்ற விராத் கோலிக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 5400க்கும்  அதிகமான ரன்களை எடுத்து உள்ள நிலையில் இந்த தொடரில் இவர் 6 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை அடைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்