திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (08:13 IST)

ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்: மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அமைச்சர்

ஆக்சிஜன் பெறுவதற்கு மத்திய அரசின் காலில் விழத் தயார்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஆக்சிஜனுக்காக மத்திய அரசிடம் காலில் விழ கூட தயார் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 
 
இந்தியாவிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்தில் நேற்று சுமார் 67,000 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதனால் மருத்துவமனைகளில் நோயாளிகள் குவிந்து வருகின்றனர் என்பதும் பெரும்பாலான மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் உடனடியாக மகாராஷ்டிரா மாநிலத்திற்கு தேவையான ஆக்சிஜனை அனுப்புங்கள் என்றும் ஆக்சிஜனுக்காக மத்திய அரசின் காலில் கூட தயாராக இருக்கிறேன் என்று மகாராஷ்டிர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே அவர்கள் உருக்கமாக தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஆக்சிஜனை ஒதுக்கும் அதிகாரத்தை கையில் வைத்துள்ள மத்திய அரசு உடனடியாக தேவை அதிகமுள்ள மாநிலத்திற்கு ஆக்சிஜனை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது.