வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (19:33 IST)

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் எடுத்த அதிரடி முடிவு!

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் எடுத்த அதிரடி முடிவு!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினத்துடன் லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பிளே ஆஃப் போட்டிகள் தொடங்க உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்த நிலையில் இன்று குவாலிபயர் 1 போட்டியில் டெல்லி மற்றும் மும்பை அணிகள் மோத உள்ளன. இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக முடிவெடுத்தார் இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் மும்பை அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த போட்டியில் வெல்லும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதும் தோல்வி அடையும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இன்று விளையாடும் இரு அணிகளின் வீரர்கள் குறித்து தற்போது பார்ப்போம்:
 
டெல்லி அணி: பிபி ஷா, தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், சாம்ஸ், அஸ்வின், ரபடா, நார்ட்ஜி
 
மும்பை அணி: ரோஹித் சர்மா, டீகாக், சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு, க்ருணால் பாண்ட்யா, நைல், டிரண்ட் போல்ட், சஹார், பும்ரா,