1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
  4. Shreayas iyer is ready for facing Mumbai indians

மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - ஸ்ரேயாஸ் ஐயர்

மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல் தொடரின் முதல் ப்ளே ஆஃப் போட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

பரபரப்பாக நடந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் முடிந்துவிட்டன. இதனையடுத்து இப்போது ப்ளே ஆஃப் போட்டிகள் இப்போது தொடங்க உள்ளன. முதல் போட்டியில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் வலுவான மும்பை அணியை எதிர்கொள்வது குறித்து டெல்லி அணியின் இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து தெரிவித்துள்ளார். அதில் ‘மும்பை இந்தியன்ஸ் மிகச்சிறந்த அணிகளில் ஒன்று. ஆனால் நாங்களும் அச்சமின்றி விளையாடும் அணிதான். அவர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கிரிக்கெட்டில் அன்றைய நாளின் செயல்பாட்டைப் பொறுத்தே முடிவுகள் அமையும்.’ எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
இந்திய அணிக்கு விளையாடுவதை விட ஐபிஎல் முக்கியமா?? ரோஹித் ஷர்மாவை காய்ச்சி எடுக்கும் முன்னாள் வீரர்கள்!