வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐ‌பிஎ‌ல்
Written By
Last Updated : வியாழன், 5 நவம்பர் 2020 (10:21 IST)

பொல்லார்டின் தத்துவ டிவீட் பரபரப்பு – யாரை சொல்லுகிறார என்ற குழப்பம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் துணைக் கேப்டன் பொல்லார்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த போஸ்ட் ஒன்று குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வருகிறார் பொல்லார்ட். இந்நிலையில் இந்த ஆண்டு ரோஹித் ஷர்மா அணியில் இல்லாத போது அணிக்கு தலைமையும் தாங்கினார். இந்நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டிக்குப் பிறகு அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்திருந்தார்.

அதில் ‘என்னை வெறுக்கிறேன் என நேராக சொல்லும் எதிரியே வேண்டும். ரகசியமாக என்னை கீழே தள்ள முயற்சிக்கும் நண்பனுக்குப் பதிலாக’ எனப் பகிர்ந்துள்ளார். இது யாரைக் குறித்து பகிரப்பட்ட போஸ்ட் என்பதுதான் இப்போது கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய குழப்பமாக உள்ளது