திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (19:23 IST)

டெல்லி அபார வெற்றி: ராஜஸ்தானின் கடைசி வாய்ப்பு பறிபோனது:

இன்று நடைபெற்ற டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 53வது ஐபிஎல் லீக் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதால் ராஜஸ்தான் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.
 
இன்று முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய நிலையில் பராக் மட்டும் ஓரளவு நிலைத்து நின்று 50 ரன்கள் எடுத்தார்.
 
இந்த நிலையில் 116 என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் டெல்லி அணி 18 புள்ளிகள் பெற்றது. இருப்பினும் ரன்ரேட் அடிப்படையில் சென்னை அணியே முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று இரவு 8 மணிக்கு ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் ஐதராபாத் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.