1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (21:30 IST)

முதுகுவலியால் திடீரென விலகிய பிரபல வீரர்! பிளே சுற்றை எப்படி சமாளிப்பது?

முதுகுவலியால் பிரபல பந்துவீச்சாளர் ரபடா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகிவிட்டதால் டெல்லி அணி, அவர் இல்லாமல் எப்படி பிளே ஆப் சுற்றை விளையாடுவது என்ற சிக்கலில் உள்ளது.
 
டெல்லி அணி 7 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டுதான் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் பங்களிப்பு அபாரமானது என்றாலும் பெரும்பாலான போட்டிகளின் வெற்றிக்கு அந்த அணியின் பந்துவீச்சாளர் ரபடா இன்னொரு முக்கிய காரணமாக இருந்தார். குறிப்பாக காயம் காரணமாக சமீபத்தில் நடந்த சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரபடா விளையாடவில்லை. அந்த போட்டியில் சென்னை அணி வெளுத்து வாங்கி வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்
 
இந்த நிலையில் ரபடா பயிற்சியின்போது ஏற்பட்ட முதுகுவலி காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி தனது சொந்த நாடான தென்னாப்பிரிக்காவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
பிளே ஆஃப் சுற்றில் முதல் இரண்டு இடங்களில் டெல்லி அணி இருந்தாலும், முதல் சுற்றில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. இருப்பினும் ரபடா இல்லாத டெல்லி அணி கோப்பையை நெருங்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்