பெங்களூருக்கு 6வது தோல்வி: ஸ்ரேயாஸ் அதிரடியால் டெல்லி வெற்றி

Last Modified ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (19:20 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி பெங்களூரு அணிக்கு ஒரு பெரிய சோதனை என்றே கூற வேண்டும்., மற்ற அணிகள் எல்லாம் முதலிடத்தை பிடிக்க வெற்றி மேல் வெற்றி பெற்று தீவிர முயற்சியில் இருக்கும் நிலையில் பெங்களூரு அணி மட்டும் முதல் வெற்றியை பெறவே போராடி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலாவது பெங்களூரு அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றும் தோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியது
இன்றைய போட்டியில் 150 ரன்கள் என பெங்களூரு கொடுத்த இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணி 18.5 ஓவரில் 6 விக்கெட்டுக்களை இழந்து 152 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 67 ரன்களும், பிபிஷா 28 ரன்களும், இங்க்ராம் 22 ரன்களும் எடுத்தனர்.

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றதை அடுத்து டெல்லி அணி ஐதராபாத், கொல்கத்தா, மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு நிகராக 6 புள்ளிகள் பெற்றுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :