டாஸ் வென்ற டெல்லி பவுலிங்: பெங்களூருக்கு முதல் வெற்றி கிடைக்குமா?

Last Modified ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (15:57 IST)
விராத் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடி ஐந்திலும் தோல்வி அடைந்த நிலையில் இன்று பெங்களூரு அணியுடன் மோதுகிறது
இந்த போட்டிக்கான டாஸ் சற்றுமுன் போடப்பட்ட நிலையில் டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து இன்னும் சற்று நேரத்தில் பெங்களூரு அணி பேட்டிங் செய்யவுள்ளது. பெங்களூரு அணிக்கு முதல் வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இன்றைய போட்டியில் ஆடும் 11பேர் டெல்லி அணியில் பிரித்திவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், காலின் இங்க்ராம், ராகுல் திவேதியா, கிறிஸ் மோரிஸ், அக்சார் பட்டேல், ரபடா, இஷாந்த் சர்மா மற்றும் சந்தீப் லாமிச்சேனே ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோஹ்லி, டிவில்லியர்ஸ், ஸ்டோனிஸ், மோயின் அலி, அக்ஷதீப் நாத், பவன் நேகி, செளதி, நவ்தீப் சயினி, சாஹல் மற்றும் சிராஜ் ஆகியோர் உள்ளனர்,


இதில் மேலும் படிக்கவும் :