வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (19:24 IST)

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்த முடிவு என்ன?

டாஸ் வென்ற ஸ்ரேயாஸ் அய்யர் எடுத்த முடிவு என்ன?
இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியான டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டியில் டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதனை அடுத்து இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கடந்த சில போட்டிகளில் சன்ரைசர்ஸ் அணி சேசிங் செய்து வெற்றி பெற்று இருந்தாலும் ஸ்ரேயாஸ் மீண்டும் அந்த அணிக்கு சேஸ் செய்யும் வாய்ப்பு கொடுத்துள்ளது ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
இன்றைய போட்டியில் ஹெட்மையர் மற்றும் டூபே ஆகிய இருவரும் டெல்லி அணிக்கு திரும்பி உள்ளனர் என்பது அந்த அணிக்கு வலுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஹைதராபாத் அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 பேர்களுடன் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரு அணிகளும் விளையாடும் வீரர்களின் விபரங்கள் பின்வருமாறு:
 
 
டெல்லி அணி: தவான், ரஹானே, ஸ்ரேயாஸ் அய்யர், ஸ்டோனிச், ரிஷப் பண்ட், ஹெட்மயர், டூபே, அக்சர் பட்டேல், அஸ்வின், ரபடா மற்றும் நார்ட்ஜே
 
ஐதராபாத் அணி: வார்னர், கோஸ்வாமி, மணிஷ் பாண்டே, வில்லியம்சன், கார்க், ஹோல்டர், அப்துல் சமது, ரஷித்கான், நதீம், சந்தீப் சர்மா, நடராஜன்