ஐபிஎல் நடக்குமா? நடக்காதா? – நாளை மறுநாள் ஆலோசனை
கொரோனா வைரஸால் நாடு முடங்கி கிடக்கும் சூழலில் ஐபிஎல் போட்டிகள் நடத்தலாமா என்பது குறித்து நாளை மறுநாள் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் ஒலிம்பிக் போட்டிகள் மட்டும் நடத்துவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் நடத்தலாமா என்பது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. கொரோனா பாதிப்புகளால் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகள் நடைபெற இருப்பதால், அந்த சமயத்தில் ஐபிஎல் நடத்துவது மற்ற நாட்டு வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
போட்டிகளை ரத்து செய்வதால் பெரும் பணம் விரயமாகும் என்பதால் எந்த தேதியில் நடத்துவது என தீர்மானிப்பதற்காக இந்த கூட்டம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.