செவ்வாய், 25 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By mahendran
Last Modified: வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (16:38 IST)

மழையில்லாமல் தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியுள்ளது.

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று முதல் நடைபெற்று வரும் நிலையில் நேற்று இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 183 ரன்கள் எடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடிய நிலையில் நேற்று 123 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் இன்று சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. சற்று முன்னர் வரை 132 ரன்களுக்கு 4 விக்கெட்கள் இழந்து ரிஷப் பண்ட்டும், கே எல் ராகுலும் ஆடி வருகின்றனர்.