வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:41 IST)

டேவிட் வார்னர் செய்த உலக சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையே நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த போட்டியில் டேவிட் வார்னர் ஒரு புதிய சாதனையை செய்துள்ளார்

இன்றைய போட்டி டேவிட் வார்னரின் நூறாவது டி20  போட்டி என்ற நிலையில் அவர் இந்த போட்டியில் அரை சதம் அடித்தார். ஆனால் அவர் மூன்று விதமான போட்டிகளில் அதாவது டெஸ்ட் , ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று விதமான போட்டிகளில் தனது நூறாவது போட்டியில் அவர் அரை சதம் அடித்துள்ளார் என்றும் இந்த சாதனையை செய்தது டேவிட் வார்னர் ஒருவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து டேவிட் வார்னருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

முன்னதாக ஆஸ்திரேலிய அணி இன்றைய போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேற்கிந்திய தீவுகள்  அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 11 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

Edited by Siva