1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (17:27 IST)

நேற்று குடும்ப கட்சி.. இன்று பாரத ரத்னா கொடுத்ததும் கூட்டணி கட்சி.. பாஜகவின் அதிரடி..!

நேற்று வரை குடும்ப கட்சி என பாஜகவால் விமர்சனம் செய்யப்பட்ட கட்சி இன்று திடீரென பாஜக கூட்டணியில் இணைந்துள்ளதற்கு காரணம், அந்த கட்சியின் பிரமுகருக்கு பாரத ரத்னா கொடுத்தது தான் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளில் ஒன்றான ராஷ்டிரிய லோக்தள் கட்சி நேற்று வரை இருந்து வந்த நிலையில் இன்று அந்த கட்சி பாஜக கூட்டணியில் இணைந்தது. இந்த கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதமருன சரண் சிங் அவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பாஜக கூட்டணியில் இணைவதாக ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி தெரிவித்துள்ளது. 
 
நேற்று வரை குடும்ப கட்சியாக பாஜகவால் விமர்சனம் செய்யப்பட்ட கட்சி இன்று பாஜக கூட்டணியில் இணைந்ததை அடுத்து தேர்தல் நேரத்தில் இன்னும் எத்தனை கூட்டணி உடையும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ஒரு பக்கம் இந்தியா கூட்டணி உடைந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva