1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 டிசம்பர் 2022 (09:42 IST)

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: 100வது போட்டியில் சதம்அடித்த வார்னர்!

Warner
தென்னாபிரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் வார்னர் அபார சதம் அடித்துள்ளார் என்பதும் 100 போட்டியில் அவர் சதமடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணி 189 ரன்களில் ஆல் அவுட் ஆன நிலையில் தற்போது ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. 
 
டேவிட் வார்னர் 134 ரன்களுடனும் ஸ்டீவ் ஸ்மித் 58 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர் என்பதும் ஆஸ்திரேலிய அணி சற்று முன் வரை 62 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்து 40 ரன்கள் முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
டேவிட் வார்னர் 100வது போட்டியில் சதம் அடித்ததை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 100வது போட்டியில் சதம் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva