இந்த வீரர்கள் வேண்டாம் … சி எஸ் கே எடுத்த அதிரடி முடிவு – யார் யார் தெரியுமா ?

Last Modified சனி, 16 நவம்பர் 2019 (08:02 IST)
சி எஸ் கே அணி நிர்வாகம் தங்கள் அணியில் இருந்து சில முக்கிய வீரர்களை இழக்க முடிவு செய்துள்ளது.

ஐ.பி.எல். 13வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிச. 19ல் கோல்கட்டாவில் நடக்கிறது. இந்நிலையில் நேற்று அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்ட வீரர்கள் பட்டியலை வெளியிட்டன.

ஐபிஎல்-ல் பெரிதும் எதிர்பார்க்கப்படும் அணிகளுள் ஒன்றான சி எஸ் கே அணி கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு சென்று தோற்றது. இதையடுத்து அடுத்த ஆண்டுக்கான அணியில் இருந்து சில வீரரகளை கழட்டி விட்டுவிட்டு புதிய வீரர்களை வாங்கும் முனைப்பில் உள்ளது. அதில் முக்கிய வீரர்களாக  இந்திய அணியைச் சேர்ந்த கேதார் ஜாதவ், மோகித் சர்மா, துருவ் ஷோரே, இங்கிலாந்தின் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் விடுவிக்கப்படுவார் எனத் தெரிகிறது. இதில் உலகக்கோப்பை போட்டியில் தேர்வு செய்யப்படாத விரக்தியில் அனைத்து விதமானப் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்த அம்பாத்தி ராயுடுவும் அடக்கம். இதனால் ரசிகர்கள் சி எஸ் கே அணிக்குள் வர இருக்கும் புதிய வீரர்களைக் காண ஆர்வமாக இருக்கின்றனர்.இதில் மேலும் படிக்கவும் :