செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 10 ஏப்ரல் 2021 (15:47 IST)

தோனி அணியை சமாளிக்குமா பண்ட்டின் இளம் படை?

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டி இன்று மும்பையில் நடக்க உள்ளது.

ஐபிஎல் 2021 சீசன் நேற்று சென்னையில் தொடங்கியது. நடந்த முதல் போட்டியில் பெங்களூர் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லி அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளதால், முதல் முறையாக பண்ட் தலைமையேற்று அணியை வழிநடத்த உள்ளார். கடந்த முறை மோசமான தோல்வியோடு வெளியேறிய சென்னை அணி இந்த ஆண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது.