வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (08:56 IST)

தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடாமல் ஐபிஎல்-க்கு ஓடிவந்த வீரர்கள்- ஷாகித் அப்ரிடி கண்டனம்!

சென்றுள்ள பாகிஸ்தான் அணி அங்கு ஒருநாள் மற்றும் டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

முதலில் நடந்த ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் 3 ஆவது போட்டியில் தென்னாப்பிரிக்காவின் டிகாக், மில்லர், நார்ட்ஜே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் ஐபிஎல் போட்டிகளில் கலந்துகொள்ள இந்தியாவுக்கு கிளம்பிவிட்டனர். அதற்கு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியமும் அனுமதி அளித்துவிட்டது. தேசிய அணிக்காக விளையாடாமல் காசுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது முக்கியமா என வீரர்கள் மேல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி ‘சர்வதேச போட்டிகளில் தாக்கம் செலுத்தும் அளவுக்கு ஐபிஎல் போன்ற லீக் போட்டிகள் இருப்பது வருத்தம் அளிக்கிறது.’ எனக் கூறியுள்ளார்.