இனிமேல் இந்த துண்டு துக்கடாவைக் கேட்க வேண்டாம் – சி எஸ் கே அணியின் சர்ச்சை டிவிட் !

Last Modified திங்கள், 16 மார்ச் 2020 (10:12 IST)

சஞ்சய் மஞ்சரேக்கரைக் கேலி செய்யும் விதமாக சி எஸ் கே அணி ஒரு டிவிட்டைப் பகிர்ந்துள்ளது.

இந்திய அணியின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் பிசிசிஐ வர்ணனையாளர்கள் குழுவில் ஒருவராக இருந்து வந்தார். இந்நிலையில் அவரை திடீரென பிசிசிஐ அந்த குழுவில் இருந்து நீக்கியுள்ளது. இது சம்மந்தமாக சிஎஸ்கே அணி ட்விட்டரில் ‘இனிமேல் இந்த துண்டு துணுக்கோட வர்ணனையைக் கேட்க வேண்டிய தேவையிருக்காது’ எனத் தெரிவித்து ஒரு டிவிட்டை போட்டுள்ளது. இதை சி எஸ் கே ரசிகர்கள் பலரும் டிவிட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகளின் வர்ணனையின் போது அவர் மும்பை இந்தியன்ஸ் அணியைத் தூக்கியும் மற்ற அணிகளை மட்டம் தட்டி பேசுவதாக மஞ்சரேக்கர் மேல் குற்றச்சாட்டு உண்டு. மேலும் அவர் சி எஸ் கே அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜாவை துண்டு துக்கடா வீரர் என சொல்லி கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது அதே பாணியில் சிஎஸ்கே அவரைக் கலாய்த்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :