திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 15 மார்ச் 2020 (11:31 IST)

விஜய்க்காக பாடிய யுவன் சங்கர் ராஜா! – ஆடியோ லாஞ்ச் அப்டேட்!

மாஸ்டர் பட பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கும் நிலையில் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியாக இருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்திற்கு ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் ஆடியோ வெளியீட்டு விழா இன்று நேரடி ஒளிபரப்பாக நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே குட்டி ஸ்டோரி, வாத்தி இஸ் கம்மிங் பாடல்கள் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் நிலையில் நேற்று மூன்றாவதாக ‘வாத்தி ரெய்டு” என்ற பாடல் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.

தொடர்ந்து மாஸ் குத்துப்பாட்டாக வெளியாகி வரும் நிலையில் ரொமாண்டிக் பாடல் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. புதிய கீதை படத்தில் முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா நடிகர் விஜய்க்கு இசையமைத்தார். அதற்கு பிறகு அவர்கள் கூட்டணியில் ஒரு படமும் வரவில்லை.

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் அனிருத் இசையமைத்துள்ள காதல் பாடலான ”அந்த கண்ண பாத்தாக்கா” என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவனின் மயக்கும் குரலில் விஜய்யின் பாடலை கேட்க ரசிகர்கள் ஆரவமாக இருக்கின்றனர்.