எம்.எஸ்.தோனி அதிரடி ஆட்டம்.. டெல்லிக்கு கொடுத்த இலக்கு இதுதான்..!
இன்று நடைபெற்று வரும் சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் பெரிய அளவில் ரன் எடுக்கவில்லை
இந்த நிலையில் எம்.எஸ். தோனி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடியதை அடுத்து 20 ஓவர்களில் எண்ணிக்கை 167 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி அணியை பொறுத்தவரை மார்ஷ் மூன்று விக்கட்டுகளையும் அக்சர் படேல் இரண்டு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இந்த நிலையில் 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் டெல்லி அணி பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Mahendran