புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 5 ஏப்ரல் 2019 (20:33 IST)

சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர் காயம்! 2 வாரங்கள் விளையாட மாட்டார் என அறிவிப்பு

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
 
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ இன்று பயிற்சி செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் காயம் அடைந்தார். அதனால் நாளை சென்னையில் நடைபெறும் போட்டி உள்பட  இரண்டு வாரங்கள் பிராவோ விளையாட மாட்டார் என சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி அறிவித்துள்ளார். 
 
பவுலிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலும் அசத்தி வரும் பிராவோ இல்லாதது சிஎஸ்கே அணியின் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிராவோவுக்கு பதில் யாரை தோனி களமிறக்குவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது
 
இந்த நிலையில் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கெ மற்றும் பஞ்சாப் அணிகள் மோதவுள்ளன.