ஐதராபாத் அணி வெற்றி: டெல்லியை சொந்த மண்ணில் வீழ்த்தியது

Last Updated: வியாழன், 4 ஏப்ரல் 2019 (23:25 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 16வது போட்டி இன்று டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 43 ரன்களும், அக்சார் பட்டேல் 23 ரன்களும் எடுத்தனர். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்குமார், முகமது நபி, கவுல் தலா இரண்டு விக்கெட்டுக்களையும், ரஷித் கான், சந்தீப் சர்மா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 130 என்ற எளிய இலக்கை விரட்டிய ஐதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெயர்ஸ்டோ 48 ரன்களும், நபி 17 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியால் ஐதராபாத் அணி 3 வெற்றிகளுடன் ஆறு புள்ளிகள் எடுத்துள்ளது


இதில் மேலும் படிக்கவும் :