திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 12 செப்டம்பர் 2022 (08:30 IST)

“என்னை மணக்கோலத்தில் பார்க்க என் பெற்றோர் ஆசைப்படுகிறார்கள்…” சிம்பு கருத்து!

நடிகர் சிம்பு தன்னுடைய திருமணம் குறித்து தெரிவித்த கருத்து ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் சிம்பு தொடர் தோல்விகளுக்குப் பிறகு மாநாடு படத்தின் வெற்றியின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். அதையடுத்து அவர் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.

இதையடுத்து இப்போது படத்த்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார். அப்படி ஒரு நிகழ்ச்சியில் தன்னுடைய திருமணம் குறித்து அவர் கருத்து தெரிவித்துள்ளார்.  அதில் “என்னை திருமணக் கோலத்தில் பார்க்க என் அப்பா அம்மா ஆசைப்படுகிறார்கள். எனக்குதான் பயமாக உள்ளது. அவசரமாக திருமணம் செய்துகொண்டு அதன் பின்னர் மோதல் எழுந்து விவாகரத்து பிரச்சனைகள் வரக்கூடாது என நான் திருமணத்தை தள்ளிபோடுகிறேன். எனக்கான ஆள் வரும் வரை நான் காத்திருப்பேன்” எனக் கூறியுள்ளார்.