திங்கள், 4 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (20:28 IST)

கொரோனா நிலைமை சரியானாலும் உடனடியாக கிரிக்கெட் தொடர் நடத்த முடியாது – முன்னாள் வீரர் கருத்து !

கொரோனா வைரஸ் பரவல் நிலைமை கட்டுக்குள் வந்தாலும் உடனடியாகக் கிரிக்கெட் தொடர் நடத்த முடியாது என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் இயக்குனர் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. உலகளாவிய போட்டிகள் பலவும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளையும் ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நடத்துவது இல்லை என பிசிசிஐ அறிவித்தது. அதன் பின்னர் நடத்துவது குறித்து ஐபிஎல் அணி உரிமையாளர்கள் மற்றும் கவுன்சில் ஆலோசனை கூட்டம் நாளை நடத்த இருந்தனர். ஆனால் அந்த கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே போல ஆறு மாதங்களுக்குப் பின்னர் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த உலகக்கோப்பையும் ஆஸ்திரேலியாவின் விசா பிர்ச்சனைகளால் சிக்கலுக்குள்ளாகியுள்ளது. இதனால் சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் தொடர்களை நடத்த முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் தொடர்களை உடனடியாக தொடங்க முடியாதது குறித்து தென்னாப்பிரிக்கா முன்னாள் வீரர் ஸ்மித் ஒரு கருத்தை முன் வைத்துள்ளார். அவரின் கருத்தின் படி ’அடுத்த சில மாதங்களில் கொரொனா தொற்று கட்டுக்குள் வந்தாலும் உடனடியாக கிரிக்கெட் தொடர்களை நடத்த முடியாது. ஒரு தொடருக்கு 42 நாட்களுக்கு முன்னதாகவே வீரர்கள் தயாராக இருக்க வேண்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்போது கொரோனாவால் போட்டிகள் ரத்தாகியுள்ள நிலையில் நிலைமை சரியானாலும் உடனடியாக போட்டிகளை நடத்த முடியாது’ எனத் தெரிவித்துள்ளார்.