கொரோனா பரவலுக்கு காரணமான நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலம் சீல்: அதிகாரிகள் அதிரடி

நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலம் சீல்
Last Modified வியாழன், 2 ஏப்ரல் 2020 (19:13 IST)
நிஜாமுதீன் வழிப்பாட்டுத்தலம் சீல்
கொரோனா பரவலுக்கு காரணமான நிஜாமுதீன் வழிப்பாட்டு தலத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கடந்த மார்ச் மாதம் 13 முதல் 15 வரை டெல்லி
நிஜாமுதீன் வழிப்பாட்டு தலத்தில் மாநாடு ஒன்று நடைபெற்றது. இதில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர்களும் வெளிநாட்டினர் நூற்றுக்கணக்கானோர்களும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலானோர்களுக்கு கொரோனா தாக்குதல் உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தாக்குதலுக்கு ஆளான 309 பேர்களில் 264 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்க காரணமாக இருந்த
நிஜாமுதீன் வழிப்பாட்டு தலத்தை தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :