டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 264 பேருக்கு கொரோனா பாதிப்பு !

coronovirus
Sinoj| Last Updated: வியாழன், 2 ஏப்ரல் 2020 (18:48 IST)

கொரோனாவை தடுக்க
இந்தியா முழுவதும்
144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், மக்கள் வீட்டில் இருக்காமல் வீட்டை வெளியே வந்துகொண்டுள்ளனர். இவர்களை கண்காணிக்க போலீஸார் ரோந்து வருகின்றனர்.


சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற நிஜாமுதீன் தப்விஹி மாநாட்டில் கலந்து கொண்டோருக்கு கொரோனா தொற்று இருப்பதற்கான அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த மாநாட்டில் பல்லாயிரக்கானவர்கள் பங்கேற்றனர். அதில், தமிழகத்தில் இருந்து 190 பேர் பங்கேற்றுள்ளனர். துரதிஷ்டவசமாக அவர்கள் அத்துனை பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 100 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309ஆக உயர்ந்துள்ளது

இந்நிலையில், டெல்லி மாநாட்டில் பங்கேற்ற 1,103 பேரில் 264 பேருக்கு கொரேனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுஇதில் மேலும் படிக்கவும் :