வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 2 ஏப்ரல் 2020 (19:44 IST)

அமேசான் காட்டின் பழங்குடியினர்களுக்கும் கொரோனா: அதிர்ச்சி தகவல்

அமேசான் காட்டின் பழங்குடியினர்களுக்கும் கொரோனா
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் நுழைந்துவிட்ட நிலையில் இந்த கொரோனா வைரஸ் மனிதர்கள் மிக அரிதாகவே வாழும் அமேசான் காட்டிலும் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
அமேசான் காட்டில் சிறு சிறு குழுக்களாக பழங்குடியின மக்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில் அவர்களில் ஒரு பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதியாகியுள்ளது சமீபத்தில் அமேசான் காட்டை சேர்ந்த பழங்குடியின பெண் ஒருவர் நகரத்திற்குள் சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்ததாகவும் அந்த மருத்துவருக்கு கொரோனா இருந்ததால் அந்தப் பெண்ணுக்கும் கொரோனா தொற்றி கொண்டதாகவும் இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தினர்களுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
இதனை அடுத்து அந்த பெண்ணையும் அந்த பெண்ணின் குடும்பத்தினர்களையும் நகரத்திற்கு இடத்திற்கு வரவழைத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பிரேசில் அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஏற்கனவே பிரேசில் நாட்டில் சுமார் 7 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு 255 பேர் பலியாகியுள்ளனர். தற்போது அமேசான் காட்டிலும் கொரோனா வைரஸ் நுழைந்து விட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது