1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Cricket match stopped with Pakisthan

காபூலில் தூதரக தாக்குதல்: பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி ரத்து!!

காபூல்
பாகிஸ்தானுக்கு எதிரான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளது ஆப்கானிஸ்தான். 


 
 
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஜெர்மனி, பிரான்ஸ், இந்திய நாட்டு தூதரகங்கள் குறிவைத்து தற்கொலை படைத தாக்குதல் நடந்தது.
 
பாகிஸ்தானை மையமாக கொண்ட ஹக்கானி தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாக ஆப்கானிஸ்தான் சந்தேகிக்கிறது.
 
எனவே, தீவிரவாத தாக்குதல் காரணமாக பாகிஸ்தானுடனான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டியை ரத்து செய்துள்ளது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம். 
 
தீவிரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் இந்தியா கிரிக்கெட் விளையாடாது என மத்திய அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
மேட்ச் இப்படி ஆயிருச்சே! ஆஸ்திரேலியா-நியூசிலாந்து வீரர்கள் புலம்பல்