வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 22 ஜனவரி 2023 (07:34 IST)

ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும்: ஐசிசி பரிந்துரை!

olympic
ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் தற்போது ஐசிசி ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வழியாக உள்ளன. 
 
2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் கிரிக்கெட் சேர்க்க ஐசிசி பரிந்துரை செய்துள்ளது 
 
இந்த பரிந்துரையின் படி ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் ஆண்கள் பெண்கள் அணியில் தலா ஆறு அணிகள் பங்கேற்கும் என்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை சேர்க்க ஒலிம்பிக் போட்டியின் அமைப்பிடம் ஐசிஐசி பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
வரும் அக்டோபர் மாதம் மும்பையில் நடக்கும் சர்வதேச ஒழுங்கு கவுன்சில் கூட்டத்தில் இது உறுதி முடிவு செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அனேகமாக 2028 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva