வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 20 ஜனவரி 2023 (17:11 IST)

ரூ.96 கோடி பணத்தை இழந்த உசேன் போல்ட்!

ஒலிம்பிக் போட்டியில் மின்னல் வேகத்தில் ஓடி சாதனை படைத்தவர் உசேன் போல்ட். இவர்  3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளளார்.

கடைசியாக இவர் 2107 ஆம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார்.

கிங்ஸ்டனை தளமாகக் கொண்டு செயல்படும் ஸ்டாக் அண்ட் செக்யூரிட்டீஸ் லிமிட்.. என்ற முதலீட்டு நிறுவனத்தில் முதலீடு செய்திருந்தார்.

இந்த நிலையில், இவர் கணக்கில் இருந்து இந்த முதலீட்டு நிறுவனத்தால் 12 மில்லியன் டாலரை இவர் இழந்துள்ளார்.

இந்த தொகை இந்திய மதிப்பில் ரூ.96 கோடி எனக் கூறப்படுகிறது.  தற்போது இவரது கணக்கில்12,000 டாலர்கள் மட்டுமே இருப்பதாக இவரது வக்கீல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாகக உசேன்போல்ட் விரைவில் நீதிமன்றம் செல்லுவார் என கூறப்படுகிறது.