வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2017 (20:59 IST)

அதிக தோல்விகள்: சச்சினுடன் இணைந்த குக்!!

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஆஷஸ் தொடரின் 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
 
இங்கிலாந்து அணி தொடர்ந்து மூன்று தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த அணியின் அனுபவ வீரருமான அலஸ்டைர் குக்கிற்கு இது 150 வது டெஸ்ட் போட்டி ஆகும். ஆனால், இந்த டெஸ்டில் குக் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தார்.
 
அத்துடன் குக் ஆஸ்திரேலியாவில் தோற்கும் 14 வது டெஸ்ட். இதன்மூலம் ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோல்வியை சந்தித்த வீரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார். இதற்கு முன் சச்சின், சர் ஜேக் ஹோப்ஸ் ஆகியோர் 14 டெஸ்டில் தோல்விகளை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.