1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (09:22 IST)

YouTube சேனல் தொடங்கி 24 மணி நேரத்தில் 1.20 கோடி Subscribers? - மாஸ் காட்டிய ரொனால்டோ!

ronaldo

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ நேற்று யூட்யூப் சேனல் தொடங்கிய நிலையில் சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

 

 

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட கால்பந்து வீரர்களில் ஒருவர் போர்ச்சுக்கல் நாட்டை சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ. க்ளப் போட்டிகள், சர்வதேச போட்டிகள் என பல கால்பந்து போட்டிகளிலும் விளையாடி வரும் ரொனால்டோ அதிகமான சம்பளம் பெறும் கால்பந்து வீரர்கள் பட்டியலிலும் முன்னிலையில் உள்ளவர். கால்பந்து தவிர நட்சத்திர விடுதி உள்ளிட்டவற்றையும் ரொனால்டோ நடத்தி வருகிறார்.

 

இந்நிலையில் நேற்று ரொனால்டோ அதிகாரப்பூர்வமாக தனது யூட்யூப் சேனலை தொடங்கினார். சேனல் தொடங்கப்பட்டு 90 நிமிடங்களுக்குள்ளேயே 1 மில்லியன் (10 லட்சம்) சப்ஸ்க்ரைபர்களை அந்த சேனல் அடைந்தது. தற்போது சேனல் தொடங்கி 24 மணி நேரம் கூட முழுதாக முடியாத நிலையில் சப்ஸ்க்ரைபர்கள் எண்ணிக்கை 12 மில்லியனை தாண்டி சென்றுக் கொண்டிருக்கிறது.

 

யூட்யூபில் பட ட்ரெய்லர்கள் வெளியாகி ஒரு நாளுக்குள் 10 மில்லியன் பார்வைகளை பெறுவதே சாதனையாக பேசப்பட்டு வரும் நிலையில் சேனல் தொடங்கி ஒரே நாளில் 1 கோடிக்கும் மேல் சப்ஸ்க்ரைபர்களை பெற்று மாஸ் காட்டியுள்ளார் ரொனால்டோ.

 

Edit by Prasanth.K