1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மே 2023 (15:43 IST)

ஸ்பெயின் நாட்டில் காட்டுத் தீயால் பரபரப்பு

spain
ஸ்பெயின்  நாட்டின்  தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீரென்று  தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின்  நாட்டில் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நாட்டின் தென்மேற்குப் பகுதியில் உள்ள எக்ஸ்ட்ரீமதுராவில் உள்ள வனப்பகுதியில் திடீர் தீப்பிடித்தது. அங்கு வீசிய காற்று மற்றும் வறண்ட தட்பவெப்பத்தால், தீ காட்டின் மற்ற பகுதிகளுக்குப் பரவியது.

இதனால், அந்த வனப்பகுதிகளைச் சுற்றிலும் இருந்த கடல்சோ, டெஸ்கார்கமரியா உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அப்பகுதியில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்தக் காட்டுத் தீயால் 8 ஆயிரத்து 500 ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளதாகவும், தீயணைப்புத்துறையினர் பல்வேறு முயற்சிகள் எடுத்து தீயை அணைத்து வருவதாகவும் தகவல் வெளியாகிறது.