செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 28 மார்ச் 2023 (19:25 IST)

ஸ்பெயினில் பரவி வரும் காட்டுத்தீ....மக்கள் அதிர்ச்சி

spain
ஸ்பெயின் நாட்டில் தற்போது காட்டுத்தீ தீ பரவி வருவதால், 1500க்கும் அதிகமான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியாவில் உள்ள  ஸ்பெயின் நாட்டில்  பெட்ரோ சான்செஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, கிழக்கு ஸ்பெனியில் உள்ள வாலன்சியா மற்றும் அரக்கோன் ஆகிய பகுதிகளில் சில நாட்களாக காட்டுத் தீ பரவி வரும் நிலையில், இதனால், அப்பகுத்தியைச் சேர்ந்த சுமார் 1500க்கும் மேற்பட்ட மக்களை பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பிவைத்து வருகின்றனர் பாதுகாப்பு படையினர்.

இந்தக் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சியில் அந்த நாட்டு தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டு வருகின்றபோதிலும், அக்காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

எனவே, அடுத்தகட்ட நடவடிக்கையாக ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் பீய்ச்சியடித்து, தீயை அணைத்து வருகின்றனர்.

தற்போது, அங்கு நிலவு வறண்டவானிலை காரணமாகா  காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன் பிரேசியில் காட்டுத்தீ பரவியது குறிப்பிடத்தக்கது.