1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 20 ஏப்ரல் 2023 (21:58 IST)

சாம்பியன் லீக் கால்பந்து: மான்செஸ்டர் அணி அரையிறுதிக்குத் தகுதி!

football
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன் லீக் தொடர் தற்போது ஜெர்மனியில் நடைபெற்று வரும் நிலையில், பேயர்ன் முனிச் அணியை வீழ்த்தி மான்சென்ஸ்டர் அரையிறுதிக்குதகுதி பெற்றது.

ஐரோப்பிய சாம்பியன் லீக் தொடர் மிகவும் புகழ்பெற்றது. ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளின் கிளப் அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியைக் காண உலகக் கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் ஐரோப்பிய சாம்பியன் லீக் கால்பந்து தொடரில் இன்று நடைபெற்ற 2 வது காலிறுதி ஆட்டத்தில், பேயர்ஸ் முனிச்- மான்செஸ்டர் சிட்டி அணிகள் மோதின.

இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால், ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  இந்த நிலையில்,  மான்செஸ்டர் அணியில் எர்லிங் 57 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

அதனைத்தொடர்ந்து, 83 வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் வீர்ர் பெனால்ட்டி வாய்ப்பை பயன்படுத்தி, கிமிச் 2 வது கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமநிலை பெற்றன.

இந்த  நிலையில், முதல் காலிறுதியில்  முதலாவது சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் அணி
3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற நிலையில், மான்செஸ்டர் மொத்தம் 4-0என்ற கணக்கில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.