வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

Petrol
சென்னையில் கடந்த 110 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த வித மாற்றமும் இல்லாத நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
 
இருப்பினும் பெட்ரோல் டீசலுக்கான விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி வருவதால் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63  எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது