வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 21 ஏப்ரல் 2018 (05:28 IST)

சிஎஸ்கே அணி அபார வெற்றி! 64 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் அணியை 64 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது
 
நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி வாட்சன் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில்  5 விக்கெட்டுக்களை இழந்து 204 ரன்கள் குவித்தது. 
 
வெற்றி பெற 205 என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 140 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 64 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.  104 ரன்கள் அடித்த வாட்சன் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.
 
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே அணி 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.