செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஏப்ரல் 2021 (09:00 IST)

மோயின் அலிக்கு சிஎஸ்கே வழங்கிய சிறப்பு சலுகை!

மோயின் அலியின் கோரிக்கையை ஏற்று சிஎஸ்கே நிர்வாகம் அவரது ஜெர்சியில் மதுபான லோகோ இடம் பெறாது என அறிவித்துள்ளது. 

 
கடந்த வருடம் மார்ச் மாதம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரம் அடைந்தது. இதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் ஓரளவு கொரோனா வைரஸ் குறைந்துவந்த நிலையில் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎல் 2021 14 வது சீசன் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. 
 
இதில், வரும் 10 ஆம் தேதி சென்னை அணி டெல்லி அணியுடன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது. சமீபத்தில் சென்னை அணி தனது புதிய ஜெர்சியை அறிமுகம் செய்தது. சிஎஸ்கே அணியின் ஸ்பான்சர்களின் ஒன்றாக மதுபான நிறுவனம் ஒன்று உள்ளது. 
 
இதனிடையே இஸ்லாம் மத நம்பிக்கையின் படி சிஎஸ்கே வீரர் மொயின் அலி தனது உடையில் மதுபான விளம்பரம் வேண்டாம் என கோரிக்கை வைத்திருந்தார். இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு மோயின் அலியின் ஜெர்சியில் மதுபான லோகோ இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.