செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:50 IST)

ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் முதல் முறை போலவே உள்ளது – ஜடேஜா மகிழ்ச்சி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ரவிந்தர ஜடேஜா தோனியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஐபிஎல் 2021 சீசன் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக சென்னை அணி மும்பையில் முகாமிட்டுள்ளது. அங்கு சென்னை வீரர்கள் பயிற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் காயத்தில் இருந்து மீண்ட ரவிந்தர ஜடேஜா சென்னை அணியில் இணைந்துள்ளார்.

அதையடுத்து அணியின் கேப்டன் தோனியை சந்தித்த அவர் அந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நான் ஒவ்வொரு முறை தோனியை சந்திக்கும்போதும் 2009 ல் முதல் முறையாக சந்தித்தது போன்ற உணர்வே ஏற்படுகிறது.  ‘ எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.