வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 1 ஏப்ரல் 2021 (17:09 IST)

சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்!

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட இருந்த ஜோஷ் ஹேசில்வுட் விலகியுள்ளார்.

சென்னை அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர்களில் ஜோஷ் ஹேசில்வுட் முக்கியமானவர். அவர் இப்போது ஐபிஎல் 2021 தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு முக்கியக் காரணமாக ஆஸி அணிக்கு வரிசையாக தொடர்கள் வர இருப்பதால் அதற்காக தன்னை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது ஐபிஎல் தொடரில் இருந்து விலகி அந்த நாட்களை குடும்பத்தோடு செல்விட போவதாக அறிவித்துள்ளார். இதனால் சென்னை அணியின் பந்துவீச்சில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.