1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 16 ஜனவரி 2020 (13:30 IST)

டென்னிஸ் தொடர் சானியா மிர்சா ஜோடி ... அரையிறுதிக்கு முன்னேற்றம்...

ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற்று வரும் ஹோபர்ட் சர்வதேச டென்னிஸ் தொடரில்  இந்தியாவின் சானியா மிர்சா ஜோடி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில்  நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில்  உக்ரைன் வீராங்கனை நாடியா கிச்செனோக்குடன் கைகோர்த்து விளையாடிய சானியா மிர்சா ஒக்சனா கலாஷ்னிகோவா  (ஜார்ஜியா ) - மியூகட்டோ ஜப்பான் ஜோடியை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினர்.
 
இனிவரும் அரையிறுதிப் போட்டியில்,  ஸ்லோனேவியா செக் குடியரசு  ஜோடி தமரா ஜிதான்செக் மற்றும் மேரி  பவுன்ஸ்கோவானை சானியா மிர்சா ஜோடி எதிர்கொள்ள உள்ளது.
சானியா மிர்சா நீண்ட காலத்திற்குப் பிறகு உடல் எடையைக் குறைத்து இந்தத் தொடரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,