புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 15 ஜனவரி 2020 (16:40 IST)

அமேசான் நிறுவனம் இந்தியாவில் ரூ.7088.90 கோடி முதலீடு !

உலக கோடீஸ்வர்களில் முதன்மையானவர் முன்னணி அமேசான் நிறுவனர் மற்றும் அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ., வான ஜெப் பெசோல் 3 நாள் சுற்றுப்பயணமாக  இந்தியா வந்துள்ளார். அவர் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு பாரத பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள ராஜ்கட் சென்ற அவர் அங்குள்ள காந்தியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் ஜெப்  கூறியவதாவது : உலகின் போக்கையே மாற்றியவர்  மகாத்மா காந்திக்கு செலுத்தினேன். இது சிறப்பான தருணம் என்று தெரிவித்தார்.
 
இதனையடுத்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெப், 21 ஆம் நூற்றாண்டு இந்திய நூற்றாண்டாக இருக்கும் என கணித்துள்ளேன். வரும் 2025 ஆம் ஆண்டில் ரூ. 70880 மதிப்புள்ள  மேக் இன் இந்தியா பொருட்களை ஏற்றுமதி செய்ய அமேசான் தனது உலகளாவிய தனங்களை பயன்படுத்தும்.
அதேபோல், இந்தியாவின் நடுத்தர சிறு நடுத்தர வணிகங்களை டிஜிட்டல் மயமாக்க அமேசான் நிறுவனம் 100 கோடி டாலரை  (ரூ. 7கோடி ) முதலீடு செய்ய உள்ளது என தெரிவித்துள்ளார். இதுவரை 5.5 பில்லியன் டாலர் முதலீடுகளைச் செய்துள்ளது என தெரிவித்தார்.