பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக வீரருக்கு ரூ.10 லட்சம் பரிசு
சமீபத்தில் நடந்து முடிந்த ஆசிய விளையாட்டு போட்டியில் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணன் வெண்கலப்பதக்கம் பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் அவரது பதக்கம் பறிக்கப்பட்டது. அவர் தனது எல்லைக்கோட்டை தாண்டிவிட்டதாக தெரிய வந்ததால் அவருடைய பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழக வீரர் கோவிந்தனின் பலவருட கனவு கையில் கிடைத்து பின்னர் கலைந்தது.
இருப்பினும் லட்சுமண் கோவிந்தன் கோடிக்கணக்கானோர் உள்ளங்களில் பதிவானார். அவருக்கு பிரபல கிரிக்கெட் வீரர் சேவாக் உள்பட பலர் ஆறுதல் கூறியதோடு, பதக்கம் பெற்று நாடு திரும்பும் வீரருக்குரிய மரியாதையை அவருக்கு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆசிய விளையாட்டு 10000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் பறிக்கப்பட்ட தமிழக வீரர் கோவிந்தன் லட்சுமணனுக்கு மத்திய அரசு ரூ 10 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு லட்சுமண் கோவிந்தனுக்கு இன்ப அதிர்ச்சியான அறிவிப்பு என்பதை சொல்லவும் வேண்டுமா?