1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (15:38 IST)

ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கம் அல்லது வெள்ளியை உறுதி செய்த பி.வி. சிந்து

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார் பி.வி.சிந்து.
8-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் செப்டம்பர் 2-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, ஜப்பான், பாகிஸ்தான், ஈரான், மலேசியா உள்பட 45 நாடுகளை சேர்ந்த 10 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 312 வீரர்களும், 257 வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். 
 
இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பேட்மிண்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், சீன வீராங்கனை தாய் டிசுயிங்கை எதிர்கொண்டு சாய்னா, 17-21, 14-21 என்ற நேர்செட்களில் போராடித் தோல்வியடைந்து வெண்கலப் பதக்கத்தை பெற்றார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் சுமார் 36 ஆண்டுகள் கழித்து இந்தியா பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் பி.வி.சிந்து ஜப்பானின் யாமாகுச்சி-ஐ அரையிறுதியில் சந்தித்தார். அந்த போட்டியில் சிந்து 21-17, 15-21, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்றார். இறுதிப்போட்டியில் சிந்து சாய்னாவை தோற்கடித்த தாய் டிசுயிங்கை எதிர்கொள்ளப்போகிறார். இதன்மூலம் சிந்து தங்கம் அல்லது வெள்ளி வெல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளார்.
சிந்து தங்கம் வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.